search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ் வோக்ஸ்"

    உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளீர்கள் என்று தொலைபேசி அழைப்பு வரவேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் அவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    போட்டியை நடத்தும் இங்கிலாந்து வலுவான அணியாக திகழ்கிறது. அந்த அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருந்தது. வரும் 23-ந்தேதிக்குள் வீரர்களை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த அணியின் கேப்டன் மோர்கன் இதுவரை 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் குறித்து எந்த செய்தியையும் கசியவிடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ள 17 பேரும் அபாரமாக விளையாடினர். இதனால் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.



    இந்நிலையில் தேர்வாளர்களின் போன் அழைப்புக்காக இங்கிலாந்து வீரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் தேர்வுக்குழுவின் போன் அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உறுதியாக இடம் கிடைக்கும் என்றாலும், அவர்கள் வாயில் இருந்து நல்ல வார்த்தை வரும் வரை உறுதி கிடையாது’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். #ENGvIND #ChrisWoakes
    இங்கிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இங்கிலாந்து தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது.

    5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வருகிற வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இடம் பெறாத கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜோ ரூட், 2. மொயீன் அலி, 3. ஜிம்மி ஆண்டர்சன், 4. பேர்ஸ்டோவ், 5. ஸ்டூவர்ட் பிராட், 6. பட்லர், 7. அலஸ்டைர் குக், 8. சாம் குர்ரான், 9. ஜென்னிங்ஸ், 10. போப், 11. அடில் ரஷித், 12. பென் ஸ்டோக்ஸ், 13 .கிறிஸ் வோக்ஸ்.
    இங்கிலாந்துக்கு எதிரான டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #ViratKohli #Rahane
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலையில் லேசாக மழை பெய்ததால் ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கியது. ரிஷப் பந்த், அஸ்வின் களம் இறங்கினார்கள்.



    92-வது ஓவரை பிராட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரிஷப் பந்த் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பிராட் வீசிய 94-வது ஓவரில் அஸ்வின் ஸ்டம்பை பறிகொடுத்தார். அஸ்வின் 17 பந்தில் 14 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷமியை 3 ரன்னிலும், பும்ராவை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேற்ற இந்தியா முதல் இன்னிங்சில் 94.5 ஓவரில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    மதிய உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட் வீழ்த்திய நாங்கள் மத்தியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்து விட்டோம் என கிறிஸ் வோக்ஸ் கூறினார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.

    அதன்பின் விராட் கோலியுடன் துணைக் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 2-வது செசன் முழுவதும் விளையாடினார்கள். இது இங்கிலாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது. இந்நிலையில் முதல்நாள் ஆட்டம் மிடில் பகுதியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் நாங்கள் திணறி விட்டோம் என்று கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘முதல் நாள் முழுவதும் பந்து மூவ் ஆனது. ஆனால், நாங்கள் மிடில் பகுதியில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க திணறி விட்டோம்.

    டாஸ் வென்று முதலில் பந்து வீசும்போது, இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



    இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.
    3-வது டெஸ்டில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்காமல், போப்பிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸை சேர்க்க வேண்டும் என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆல் ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் இடம்பிடித்திருந்தார். இவர் சதம் அடித்து இந்திய அணியை இன்னிங்ஸ் தோல்வியடைச் செய்தார். அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.



    நாளை டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெறும் டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். இதனால் ஆடும் லெவனில் பென் ஸ்டோக்ஸ், சாம் குர்ரான், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரில் இருவருக்குத்தான் இடம் கொடுக்க முடியும். மூன்று பேரையும் சேர்க்க வேண்டுமென்றால் முன்னணி பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டும்.

    இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரை நீக்கக்கூடாது. பென் ஸ்டோக்ஸிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்தால் பேட்ஸ்மேன் போப்பை நீக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேனும், கேப்டனும் ஆன நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக விளையாடியதால் இந்தியா முதல் இரண்டு டெஸ்டிலும் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் விராட் கோலியின் சதத்தால் 274 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் குர்ரான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்தியாவின் ரன்குவிப்பிற்கு தடைபோட்டார்.

    அந்த அணி 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 87 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த ஆல்ரவுண்டரும், அறிமுக வீரரும் ஆன சாம் குர்ரான் அபாரமாக விளையாடி 65 பந்தில் 63 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 180 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் 13 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இந்தியாவிற்கு 194 வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    விராட் கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் கோலி விக்கெட்டை சாய்த்தார். அத்துடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். குர்ரான் ரகானே விக்கெட்டை வீழ்த்தினார். இரு ஆல்ரவுண்டரால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. அறிமுக போட்டியிலேயே 20 வயது இளைஞரான சாம் குர்ரான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.



    2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்னில் படுதோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும், கிறிஸ் வோக்ஸ் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 131 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் விக்கெட் கீப்பர் உடன் இணைந்த கிறிஸ் வோக்ஸ் அவுட்டாகாமல் 137 ரன்கள் விளாசினார். இதனால் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் இந்தியா 130 ரன்னில் சுருண்டது. கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.



    முதல் இன்னிங்சில் கிறிஸ் வோக்ஸ சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இரண்டு போட்டிகளிலும் ஆல்ரவுண்டர்களான சாம் குர்ரான், பென் ஸ்டோகஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டனர்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 137 நாட்அவுட். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஆண்டர்சனின் (5) அபார பந்து வீச்சால் 107 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இங்கிலாந்து நேற்றைய 3-வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கியது. கிறிஸ் வோக்ஸ் (120 நாட்அவுட்), பேர்ஸ்டோவ் (93) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்னுடனும், சாம் குர்ரான் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாம் குர்ரான் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    கிறிஸ் வோக்ஸ் 137 ரன்னுடன் களத்தில் இருந்தார். தற்போது வரை இந்தியா முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    விராட் கோலியை வீழ்த்தியதுடன், சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ், வானிலை கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தது. அடிக்கடி மழை விட்டுவிட்டு பொழிய, மைதானத்தை சுற்றி மேகமூட்டாக காணப்பட, வானிலையை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

    இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட் பந்துகளை சமாளித்த விராட் கோலி கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிக்க செய்த கிறிஸ் வோக்ஸ், முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஏறக்குறைய போட்டியை இந்தியாவிடம் இருந்து பறித்து விட்டார்.

    இந்நிலையில் விராட் கோலியை வீழ்த்த வானிலை நன்றாக ஒத்துழைத்தது என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்தான் ராஜா.



    2-வது நாள் ஆட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்தை நன்றாக ஸ்விங் ஆனது. விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதினேன். அதன்படி நடந்தது.

    ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின் அவுட்டாக்குவது கடினமாகிவிடும். ஆகவே, அவரை வீழ்த்தியன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து முழங்கால் காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளார். #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. இந்நிலையில் மற்றொரு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார்.



    அதேபோல் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்தியாவிற்கு எதிராக ஜூலை 12-ந்தேதி தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
    ×